சுந்தர்.சி. நடித்து வெளியான தலைநகரம் படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற கேரக்டர் நாய் சேகர்.
மீம்ஸ் அரசனாக இணைய உலகில் முடிசூடா மன்னனாக திகழும் வடிவேலுவின் படங்களில் அவரது நகைச்சுவை காட்சிகள், வசனத்துடன், அவருடைய கேரக்டர்களும் பிரபலமானவையாக இருக்கும். உதாரணமாக கைப்புள்ள, அலார்ட் ஆறுமுகம், படித்துரை பாண்டி, காண்ட்ராக்டர் நேசமணி, பாடிசோடா, புலிகேசி என பல கேரக்டர்கள் வடிவேலுவின் நடிப்பில் பிரபலமானவை.
அந்த வரிசையில், ‘நாய் சேகர்’ கேரக்டர் மிகவும் பிரபலமானதை அடுத்து, அந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் படத்தை உருவாக்க படக்குழுவினர் எண்ணினர். ஆனால் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் என தலைப்பிடப் பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில், நடிகர் வடிவேலு நடிக்கும் இந்த படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் லைகா தயாரிப்பில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் motion poster தற்போது வெளியாகியுள்ளது. இந்த motion poster-ல் “ஹாய் ஹூ ஆர் யு.. ஹே ஹவ் ஆர் யூ.. ஹே dog ஐ லைக் யூ.. அதானே!” என வடிவேலுவின் குரல் ஒலிக்க, உடன் சந்தோஷ் நாரயணன் குரலும் ஹம்மிங்காக ஒலிக்க, வடிவேலு, பச்சை சட்டை அணிந்து ஸ்கூட்டியில் வரும் புகைப்படம் முதன்மையாக இருக்கிறது.
நாய்கள் சம்மந்தப்பட்ட கதையாகவும் நிச்சயம் நாய் வளர்ப்பாளர்களை மையப்படுத்தி கதை இருக்கலாம் என்கிற யூகத்துக்கு இந்த motion poster அழைத்துச் செல்வதை தவிர்க்க முடிவதில்லை. சந்தோஷ் நாராயணனின் பெப்பியான பின்னணி இசையில் இந்த motion poster வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த motion poster-க்கு பலரும், “வா தலைவா”, “தலைவன் ஈஸ் பேக்”, “தலைவன் வேற ரகம்” என்றெல்லாம் பல ரசிகர்கள் கமெண்டுகளை கொடுத்து அன்புமழைகளை பொழுந்து வருகின்றனர். ஏறக்குறை சில வருட இடைவெளிக்கு பின் வரும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வெகுவாக உருவாகியுள்ளது.
So honoured to work with one of my most favourite artists of all time. #Vadivelu sir ! This one is for you https://t.co/yneIPWlK6U #NaaisekarReturns
— Santhosh Narayanan (@Music_Santhosh) December 10, 2021
முன்னதாக நடிகர் வடிவேலுவுக்குள் ஒரு நல்ல பாடகர் இருக்கிறார். அவரை இந்த, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பயன்படுத்தப் போகிறேன் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருந்தார். அதன் முதல் படியாக motion poster-ல் வடிவேலுவின் ட்ரேடு மார்க் சிறப்பு சப்தங்கள் ஊ, ஹே, ஹாய், அவ் என ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. மேலும் இதுவரை பார்த்திராத ஒரு புதிய கெட்டப்பில் தோன்றும் வடிவேலுவையும் இந்த போஸ்டரில் காண முடிகிறது. இந்த வடிவேலுவை திரையில் காணவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.