LATEST - "கட்சி ஆரம்பிக்க போகிறேனா..?" - 'தெறிக்கவிடும்' வடிவேலு..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மனதில் பட்டத்தை மறைக்காமல் பேசும் பழக்கம் உடையவர் நடிகர் வடிவேலு. சமீபத்தில் அவர் பேசியிருபப்து அந்த ரகம் தான். நேற்று(12.03.2020) ரஜினிகாந்தின் அரசியல் முடிவு குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது…உங்களுக்கும் தெரியாது… ஏன் அவருக்கே தெரியாது. கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற ரஜினியின் முடிவை வரவேற்கிறேன். அவர் அரசியலுக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.

ரஜினிகாந்த் அரசியல் முடிவு, வடிவேலு புதுக் கட்சி ஆரம்பிக்கிறாரா Vadivelu About Political Entry And New Political Party

தொடர்ந்து பேசிய அவர் “நான் முதலமைச்சராலாம் என நினைத்துள்ளேன். ஆனால் அதனை சிலர் கெடுக்கப் பார்க்கிறார்கள். 2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வர் நான்தான். தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்கள் தானே...”என்று கூறி இருந்தார்.

இன்று திரும்பவும் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவருக்கே உரிதான ஸ்டைலில் பதிலளித்தார். முக்கியமாக கட்சி ஆரம்பிக்க போகிறீர்களா? என்ற கேள்விக்கு, "கட்சி ஆரம்பிச்சிடலாமா? சொல்லுங்க. வானவில் கலர்ல கொடி. கொய்யா பழம் சின்னமா வெச்சிக்கலாம்" என்று நகைச்சுவையோடு கூறி இருக்கிறார்.

மேலும் கொரோனா வைரஸ் மீதான வடிவேலு மீம்ஸ்கள் பற்றி கேட்டதற்கு "நம்ம கிட்ட எதுவுமே வராதும்மா.." என்று காமெடியாக கூறியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினிகாந்த் அரசியல் முடிவு, வடிவேலு புதுக் கட்சி ஆரம்பிக்கிறாரா Vadivelu About Political Entry And New Political Party

People looking for online information on Corona, Political entry, Rajinikanth, Vadivelu will find this news story useful.