தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.
Also Read | BREAKING: விக்ரம் & பா. ரஞ்சித் இணையும் புதிய படம்.. ஆரம்பமே அதிரடி தான்! வேறமாரி அப்டேட்
விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.
மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. உள்ளே எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும் கலகலப்பாக இருந்தாலும் தான் நடிப்பதாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் விடவும் செய்திருந்தார்.
இதன் பின்னர், ஜிபி முத்துவிற்கு ஆதரவாக ஜனனியும் பேச, தனலட்சுமி செய்த விஷயம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, தான் பிக்பாஸ் வீட்டிற்கே வந்திருக்க கூடாது என குறிப்பிட்டு கண்ணீர் சிந்தவும் ஆரம்பித்தார் தனலட்சுமி.
இந்த நிலையில், தனலட்சுமியை பற்றி அமுதவாணனிடம் ஜிபி முத்து பேசும் விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
"அந்த பொண்ணு ரொம்ப நல்ல புள்ள. எனக்கு இவங்கள முன்னாடியே தெரியும். டிக்டாக் பண்றப்போ தெரியும். இப்போது தெரிந்து அவரிடம் நான் பேசவில்லை. முன்பே இந்த பெண்ணை பற்றி தெரியும், டூயட் வீடியோ எல்லாம் செய்திருக்கிறேன் என்பதால் தான் அவரிடம் போய் பேசினேன். அந்த உரிமையில் தான் அவரிடம் வாமா போம்மா என பேசினேன்" என்றார்.
இதன் பின்னர், அமுதவாணன் பெண்களுடன் டூயட் செய்வதை கலாய்க்க பதில் சொன்ன ஜிபி முத்து, "எனக்கு பெண்கள் ரசிகை தான் அதிகம். ஆனால், எந்த பெண்களுடனும் மெசேஜ் செய்ய மாட்டேன். வாட்ஸ்அப்பிலும் பேசமாட்டேன். அனைத்தும் காமெடிக்காக தான். அப்படி தான் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read | Biggboss 6 Tamil : "ரீல்ஸ் இல்லையாம்.. வராமலே இருந்திருப்பேன்".. தனியே சென்று தனலட்சுமி கதறல்..