V Square Entertainment நிறுவனம், நடிகை அமலா பால் நடிப்பில் “அதோ அந்த பறவை போல” திரைப்படம் மூலம் திரைப்பட விநியோக வியாபாரத்தில் களமிறங்குகிறது !
Also Read | மறைந்த நடிகர் விவேக் மனைவியின் நெகிழ்ச்சியான கோரிக்கை.. நிறைவேற்றிய தமிழக அரசு! முழு தகவல்
தெளிவான பார்வையும், தீராத ஆர்வமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த குணங்களை உள்ளார்ந்த இயல்பாகக் கொண்ட தனிநபர்கள் ஒன்றிணைந்தால், அது நிச்சயமாக ஒரு புரட்சிக்கு வழி வகுக்கும். அந்த வகையில் திரு. விஸ்வநாதன் மற்றும் திரு. சுனில் குமார், இருவரும் அவரவர் தொழில்களில் தங்களின் சிறந்த திறமையை நிரூபித்தவர்கள்.
இப்போது, அவர்கள் இருவரும் V Square நிறுவனத்தின் அடுத்தகட்டமாக V Square Entertainment விநியோக நிறுவனத்தினை ஒன்றிணைந்து துவங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின் முதல் திரைப்படமாக நடிகை அமலா பால் நடித்த “அதோ அந்த பறவை போல” படத்தினை விநியோகம் செய்யவுள்ளனர்.
V Square Entertainment சார்பில் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீ விஸ்வநாதன் இது குறித்து கூறியதாவது…, "சினிமா ஒரு டைம் பாஸ் அங்கமாகவும், உலகெங்கிலும் உள்ள பல பொழுதுபோக்கு ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாகவும் கருதப்பட்டாலும், அது இந்திய துணை நாடுகளில் ஒரு மதமாக கொண்டாடப்படுகிறது. துல்லியமாகச் சொல்வதானால், அது எப்போதும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அழகிய தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றை மகிழ்விக்கும், மாயாஜாலத்தை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த கருவியாக சினிமாவை நான் எப்போதும் போற்றுகிறேன்.
திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவது என்பது எனது நீண்ட நாள் கனவு, அது நனவாகியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். V Square Entertainment இல் நாங்கள் இந்தப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும் சரியான குழுவைக் கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். தொழில்துறையில் உள்ள வல்லுநர்களின் உதவியுடன் இது நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை நாங்கள் விநியோகிப்போம், மேலும் பார்வையாளர்கள் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் சிறந்த வழியைக் கண்டறிவதை உறுதிசெய்வோம். எங்களின் முதல் திரைப்படமான அமலா பால் நடித்த “அதோ அந்த பறவை போல”, பார்வையாளர்களாக எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தின் அழகிய சிறு தொகுப்பு காட்சிகளால் நாங்கள் கவரப்பட்டோம், இது பான்-இந்திய மக்களை ஈர்க்கும் திறன் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக, இப்படத்தில் நடிகை அமலா பாலின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். திரைப்பட விநியோகத் துறையில் வெளிப்படைத்தன்மையே முக்கிய அம்சம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், மேலும் எங்களது வெற்றிகரமான பயணத்திற்கு இந்த மந்திரத்தை நாங்கள் உயிராக பின்பற்றுவோம்.
V Square Entertainment ஏற்கனவே பல சுவாரசியமான திரைப்படங்களின் வரிசையை கொண்டுள்ளது மற்றும் விரைவில் அவை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8