எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி, ‘கை போ சே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று காலமானார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாட்னாவில் வசிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். அவரது மரணத்திற்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதாக அவர்கள் பத்திரிகைகளுக்கும் தெரிவித்துள்ளனர், மேலும் அவரது மரணம் குறித்து காவல்துறை மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மாமா, ஒரு பிரபலமான ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை, போலீஸார் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும். அவரது மரணத்தின் பின்னணியில் நிச்சயம் ஏதோ சதி இருப்பதாக தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ” என்று கூறினார்.
இன்று (ஜூன் 15), மும்பையில் சுஷாந்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கையின் விவரங்கள் வெளிவரவிருக்கின்றன. பாட்னாவிலிருந்து பீகாருக்கு சிஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் வந்தபின் அவர்களது முன்னிலையில் இறுதி சடங்குகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.