RRR Others USA
www.garudavega.com

#SK20 : அப்டி போடு! சிவகார்த்திகேயன் குறித்து முதல் முறை பேசிய உக்ரைன் நடிகை.. என்ன சொன்னாங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Ukraine actress Maria riaboshapka about siva Karthikeyan SK20

Thalapathy66 : விஜய் - வம்சியுடன் மீண்டும் இணைந்த தமிழ் சினிமாவின் பிரபல MOST WANTED எடிட்டர்!

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். டாக்டர் (Doctor) திரைப்படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியானது.

டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

Ukraine actress Maria riaboshapka about siva Karthikeyan SK20

இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மே 13, 2022 அன்று டான் படம் ரிலீசாக உள்ளது.

சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக சமீபத்திய புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

Ukraine actress Maria riaboshapka about siva Karthikeyan SK20

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கி உள்ளது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை Maria Ryaboshapka மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இவர் போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் பணிபுரிந்துள்ளார் மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

Ukraine actress Maria riaboshapka about siva Karthikeyan SK20

இந்நிலையில் முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் , இயக்குனர் அனுதீப் குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில்,  "உக்ரைனில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளின் பின்னணியில் சில நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அனுதீப் மற்றும் சிவகார்த்திகேயன் உடன் #SK20 படத்தில் நான் பங்கேற்பதை அறிவிக்கிறேன். அத்தகைய பிரகாசமான மற்றும் சுவாரஸ்யமான நபர்களை நான் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் கவனிப்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி - நீங்கள் சிறந்தவர்கள்!

Ukraine actress Maria riaboshapka about siva Karthikeyan SK20

நான் என் நாட்டை மிஸ் செய்கிறேன், மேலும் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்." என கூறியுள்ளார்.

வந்துட்டார்யா கேப்டன்!.. விஜயகாந்த்க்கு ஆசை மகன்களின் அன்பு முத்தம் .. என்ன விசேஷம்?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ukraine actress Maria riaboshapka about siva Karthikeyan SK20

People looking for online information on Maria riaboshapka, Sivakarthikeyan, SK20, Ukraine actress, Ukraine actress Maria riaboshapka will find this news story useful.