"மை டியர் பூதம்".. படத்தை ரசித்து பார்த்த உதயநிதி.. என்ன சொல்லிருக்கார் பாருங்க.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

udhayanithi Stalin praises my dear bootham movie

மஞ்சப்பை மற்றும் கடம்பன் படம்ங்களின் இயக்குநர் N.ராகவன் இயக்கத்தில், அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ்.பி.பிள்ளை தயாரித்து பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது 'மை டியர் பூதம்'. இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டு தேதி ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை சிறப்பு காட்சி ஒன்றில் பார்த்த முன்னணி நடிகரும்-தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் ராகவனை தொலைபேசியில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.

அதில், ‘மை டியர் பூதம்’ படத்தை, தான் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததாகவும், திரைப்படத்தோடு உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடிகிறது என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் இயக்குநர் N.ராகவனிடம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த படத்தை பாராட்டிய உதயநிதிக்கு, இயக்குநர் தனது மனமர்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனலும், ஓடிடி உரிமையை ஜீ5 தளமும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளன. படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போல் இது அமைந்துள்ளது என்று குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன், அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இம்மான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.  பூதத்துக்கும், பத்து வயதுக் குழந்தைக்குமான பிணைப்பும் பயணமும்தான் இந்தக் கதையின் முக்கியக் கரு என்று N.ராகவன் கூறினார். குழந்தைகளுக்கான ஃபேண்டஸி வகையைச் சேர்ந்த இப்படம் குடும்பப் பார்வையாளர்களால் முழுமையாக ரசிக்கப்படும், என்றார் அவர்.

மேலும், “குழந்தைகளுக்கான படம் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவாக இருக்கும், எனது ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது!” என்று N.ராகவன் கூறினார். இந்த படத்தில் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் CGI இருக்கும் என்றும், அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் N.ராகவன் கூறினார். குறிப்பாக படத்தில் நகைச்சுவை மற்றும் இதர உணர்வுகள் சரியான கலவையில் இருக்கும் என்று கூறிய இயக்குநர்,  கதாபாத்திரத்திற்காக நடிகர் பிரபுதேவா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி கொண்டதாகவும் அவரது உடல் மொழியிலும் சிரிப்பை வரவழைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவின் நடனத் திறமைக்கு ஏற்ற பாடல் உள்ளிட்ட ஐந்து வகைகளில் டி.இமான் இப்படத்திற்கான பாடல்களை இசையமைத்துள்ளார். 'மை டியர் பூதம்' படத்தின் ஒளிப்பதிவை யு.கே.செந்தில் குமார் கையாள, படத்தொகுப்பை சான் லோகேஷ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநர் ஏ.ஆர்.மோகன் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் சிறப்பான பங்காற்றி உள்ளனர். கலகலப்பான வசனங்களை தேவா எழுதியுள்ளார். பிரபுதேவா நடிக்கும் 'மை டியர் பூதம்' திரைப்படத்தை ரமேஷ்.பி.பிள்ளையின், அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க, N.ராகவன் இயக்கியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanithi Stalin praises my dear bootham movie

People looking for online information on My dear bootham, N Raghavan, Prabhu Deva, Ramya Nambeesan, Udhayanidhi Stalin will find this news story useful.