இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்திலான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
Also Read | "நாம கொடுக்குறதுதான் பிளாக் பஸ்டர்" - Ponniyin Selvan பட விழாவில் திரிஷா மாஸ் பேச்சு!
நடிப்பு, அரசியல் என இரண்டையும் இரண்டு கண்களாக பார்த்துக் கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு இருந்தார்..
கடைசியாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற ஆர்ட்டிகள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
சட்டம் மற்றும் சமூகநீதி சார்ந்த கருத்துக்களை அழுத்தமாக பேசிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலான புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு “கலகத் தலைவன்” என்று பெயிரிடப் பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் நமக்கு பிரத்தியேகமாக கிடைத்திருக்கின்றன.
இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்து வருவதும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சேலத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | "சோழர் குலத்தின் மணி விளக்கு .." - PS-1 பட விழாவில் திரிஷாவுக்கு கார்த்தி கொடுத்த மாஸ் Intro