நடிகரும் திமுக இளைஞரணி செயலாளரும், மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக தமிழகசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது, ஸ்டார் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தான். இப்படியாக திமுக சார்பில் இந்த தொகுதியில் உதயநிதி போட்டியிடும் வேளையில் இதே தொகுதியில், இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல் சுற்றிலேயே உதயநிதி ஸ்டாலின் 3933 வாக்குகளை பெற்றுள்ளார். இதேபோல் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலி 652 வாக்குகளை பெற்றுள்ளார். அதாவது கசாலியை விட 3281 வாக்குகள் அதிகம் பெற்று உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிகழ்கிறது.