இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றாக் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏவும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின், “நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர், அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்!” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/YUvMpwQCSb
— Udhay (@Udhaystalin) May 17, 2021
அத்துடன் இறுதிச்சடங்கில் அருண்ராஜா காமராஜூடனுயே அவரை கைத்தளமாய் பிடித்து அழைத்து வரும் உதயநிதியின் புகைப்படங்களும் காணக்கிடைக்கின்றன. உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்டிகள் 15 எனும் இந்தி டு தமிழ் ரீமேக் படத்தினை அருண்ராஜா காமராஜ் இயக்கிவருகிறார். இந்த படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
ALSO READ: "ஏழை, பணக்காரர்கள் யாருக்கு வேணாலும்..".. ப்ரியா பவானி ஷங்கர்..நெஞ்சை உருக்கும் ட்வீட்!