www.garudavega.com

கமல் தயாரிக்கும் படத்தில் நடிப்பதில் இருந்து விலகும் அமைச்சர் உதயநிதி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை தான் தயாரிக்கவிருந்த நிலையில் தற்போது அதில் இருந்து விலகியுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin Opted out from Kamal Haasan Production movie

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலும் நடித்தும் திரைப்படங்கள் தயாரித்தும் வந்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று (டிசம்பர் 14-ஆம் தேதி)  திமுக கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ரவி உதயநிதிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் மாமன்னன் கடைசி படம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னதாக, “நடிப்பதை நிறுத்துகிறீர்களா?” என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அதுல ஏன் உங்களுக்கு அவ்வளவு கவலை” என கலகலப்பாக கேட்டார்.  தொடர்ந்து பேசியவர், “கமல்ஹாசன் சார் தயாரிக்கும் படத்தில் நடிப்பதில் இருந்தும் விலகியுள்ளேன். அமைச்சராகும் விஷயத்தை கமல்ஹாசன் சாரிடம் சொன்னதும் முதலில் அவர்தான் வாழ்த்தினார்.” என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Opted out from Kamal Haasan Production movie

People looking for online information on Kamal Haasan, Udhayanidhi, Udhayanidhi Stalin will find this news story useful.