www.garudavega.com

"வாரிசு, துணிவு கலெக்ஷன்".. அத தெரிஞ்சுகிட்டு.. வெளிப்படையாக பேசிய உதயநிதி.. EXCLUSIVE!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanidhi Stalin opens up about varisu and thunivu movie collections

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'விடுதலை' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் எப்போ? வெற்றிமாறன் சொன்ன சூப்பர் தகவல்!

திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சரான பிறகு முழு நேர அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். அதே போல, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், தற்போது அரசியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மறுபக்கம், உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த சில திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்த கலகத்தலைவன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருந்தது.

Udhayanidhi Stalin opens up about varisu and thunivu movie collections

Images are subject to © copyright to their respective owners.

கண்ணை நம்பாதே

இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக "கண்ணை நம்பாதே" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை எடுத்த மு. மாறன், கண்ணை நம்பாதே திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் வகையில் கண்ணை நம்பாதே திரைப்படம் உருவாகி உள்ள சூழலில் இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 17 ஆம் தேதி கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Udhayanidhi Stalin opens up about varisu and thunivu movie collections

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், கண்ணை நம்பாதே படத்தின் நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மு. மாறன் மற்றும் நடிகை ஆத்மிகா ஆகியோர் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளனர். இதில், கண்ணை நம்பாதே திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

Exclusive பேட்டி

மேலும் அமைச்சர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தனது அரசியல் பயணம் குறித்தும், திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகியது குறித்தும் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார். இந்த நிலையில், வாரிசு மற்றும் துணிவு படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட் குறித்த கேள்விக்கு உதயநிதி சொன்ன பதில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Udhayanidhi Stalin opens up about varisu and thunivu movie collections

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த வாரிசு திரைப்படமும், அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருந்த துணிவு திரைப்படமும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகியிருந்தது. இதில் துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி இருந்தது. அதே போல வாரிசு படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ஒரு சில பகுதிகளில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரிசு, துணிவு கலெக்ஷன் ரிப்போர்ட்

இரண்டு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆனதால் கலெக்ஷன் குறித்த பேச்சுக்கள் அதிகம் பரவலாக இருந்து வந்தது.

இந்த இரண்டு படங்களின் கலெக்ஷன் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இதற்கு பதிலளித்த உதயநிதி, "நான் கேட்டுக்கவே இல்ல. அது தெரிஞ்சு நமக்கு என்ன ஆகப்போகுது. ப்ரொடியூசர்ஸ் ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க. ரெண்டு பேருடைய ரசிகர்களும் படம் பார்த்து சந்தோஷமா இருக்காங்க. எவ்வளவு கலெக்ட் பண்ணுச்சுன்னு நமக்கு தெரிஞ்சு என்ன பண்றது. நம்ம என்ன இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம் அந்த படத்துல. நமக்கு ஏதாவது லாபம் வர போகுதா?. அது ஏன் எல்லாரும் கேட்கிறார்கள் என்று எனக்கு புரிய மாட்டேங்குது" என தெரிவித்த அவர், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து தான் வெளியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

Also Read | LEO படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. போட்டோவுடன் வெளிவந்த செம்ம அப்டேட்!

"வாரிசு, துணிவு கலெக்ஷன்".. அத தெரிஞ்சுகிட்டு.. வெளிப்படையாக பேசிய உதயநிதி.. EXCLUSIVE!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin opens up about varisu and thunivu movie collections

People looking for online information on Thunivu, Udhayanidhi Stalin, Udhayanidhi Stalin Exclusive Interview, Varisu will find this news story useful.