சென்னை: விரைவில் வெளியாகும் PAN INDIA படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை கைப்பற்றியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அரண்மனை3, அண்ணாத்த, ராதே ஷ்யாம் படங்களின் தியேட்டர் உரிமையை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் விஷ்ணு விஷால் தயாரிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள FIR படத்தின் திரையரங்க உரிமையை நேற்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
FIR படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். வழக்கறிஞராக மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய பெண் வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (01.02.2022) PAN INDIA படமான சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை அதிகரப்பூர்வமாக டிவிட்டரில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. முதலில் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ET படம் OTT-யில் வெளியாகும் என தகவல்கள் பரவின. இதனை மறுத்து படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் நேற்று டிவீட் செய்துள்ளார். அதில் ET படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் ET படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.