விக்ரம் படத்தின் தமிழக வசூல் குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்கினார். ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர். விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.
விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை பரிசளித்தார். இந்த வாரம் விக்ரம் படம் மூன்றாவது வாரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் தமிழக வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், "விக்ரம் படம் 3வது வாரத்தை தொடுகிறது. இதுவரை தமிழகத்தில் தமிழ் சினிமாவின் முந்தையை அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது" என ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாகுபலி 2, மாஸ்டர், விஸ்வாசம், பிகில் படங்களின் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது. இந்த வருடத்தில் வலிமை, KGF-2, பீஸ்ட் படங்களின் சாதனையையும் விக்ரம் முறியடித்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படமாகவும் விக்ரம் படம் அமைந்துள்ளது.
Also Read | பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படம்.. அமிதாப் கொடுத்த வேற லெவல் அப்டேட்!