www.garudavega.com

மாரி செல்வராஜ் - உதயநிதி இணையும் புதிய படம்! ஷூட் எப்போ? எங்க? ஹீரோயின் யாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாரி செல்வராஜ் - உதயநிதி இணையும் புதிய படம் குறித்த ஷூட்டிங், நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Udayanithi Stalin- Mari Selvaraj project pooja on March 1st 2022

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.  மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன், கோப்ரா, இரவின் நிழல், அயலான், மலையன்குஞ்சு, பத்து தல, வெந்து தணிந்தது காடு, ஆடுஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

Udayanithi Stalin- Mari Selvaraj project pooja on March 1st 2022

சமீபத்தில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.

இதற்கு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட  நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லதிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

Udayanithi Stalin- Mari Selvaraj project pooja on March 1st 2022

 இந்த மாரி செல்வராஜ் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. குருவி, மன்மதன் அன்பு, ஆதவன், ஏழாம் அறிவு, நீர்பறவை, மனிதன் போன்ற படங்களும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். வடிவேலு மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று நடைபெற திட்டமிட்டதாகவும், பின் இந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளன. 

Udayanithi Stalin- Mari Selvaraj project pooja on March 1st 2022

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 அன்று பூஜையுடன் தொடங்கும் எனவும், இதற்காக உதயநிதி மார்ச்-3 அன்று ஏற்காட்டிற்கு செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Udayanithi Stalin- Mari Selvaraj project pooja on March 1st 2022

People looking for online information on A R Rahman, Keerthy Suresh, Mari Selvaraj, MK Stalin, Udhayanidhi Stalin will find this news story useful.