பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த சீசனில் காயின் டாஸ்க் கொண்டுவரப்பட்டது.
இதில் பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய ஆற்றல்களின் சக்திகள் நிரம்பிய நாணயங்களை கைப்பற்றும் போட்டி போட்டியாளர்களிடையே வைக்கப்பட்டது. இதில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் நாணயங்களை சேர்ந்தும், குழுவாக பிரிந்தும், தனித்தனியாகவும், தந்திரமாகவும் கைப்பற்றி இருக்கின்றனர். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் நமீதா மாரிமுத்துவை தவிர்த்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு என ஒவ்வொருவராக வெளியேறி விட்டனர்.
தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிலத்துக்கான காயினை தன்வசம் வைத்திருப்பதால் நிலத்துக்கான ஆற்றலுடன் பிக்பாஸ் வீட்டில் பெட்ரூம் பகுதியில் ஆளுமை செலுத்தி வருகிறார் நிரூப். இதேபோல் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக வாரம் ஒருவர் போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதனிடையே நிரூப் சொல்லும்படியாக கேட்பதற்கு ஹவுஸ் மேட்ஸ் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனக்கென ஒரு பெண் உதவியாளரை வைத்துக் கொள்ளலாம் என்று பிக்பாஸ் ஏற்கனவே கூறியதை அடுத்து, நிரூப் அக்ஷராவைத் தேர்ந்தெடுத்தார். முதலில் மறுத்து போராட்டம் செய்த அக்ஷரா, பின்னர் தொடர்ச்சியாக நிரூப் அக்ஷராவுடன் சமாதானத்துக்கு இறங்கி பேசுவதால் அந்த ரோலில் இருக்கிறார்.
இந்த நிலையில் அனைவரும் சினிமா கதாபாத்திரங்கள் போன்ற வேடங்களை அணிந்து பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தனர். அதன்படி, அந்நியன், சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களாகவும், சிவாஜி, எம்.ஆர்.ராதா, ரஜினி என நேரடி நடிகர்களின் வேடங்களையும் அணிந்து போட்டியாளர்கள் வலம் வந்தனர். இதில் இம்சை அரசன் வேடத்தை அணிந்திருந்த மதுமிதாவுக்கும், நாட்டிய உடை அணிந்த தாமரைக்கும் இடையே வாதம் மூண்டது.
அதன்படி மதுமிதா, தாமரையிடம் தன்னை மெண்டல் என எப்படி சொல்லலாம் என்று கேட்க, தாமரை, “அப்படி தான் சொல்லுவேன் .. அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டேன்” என்று பதிலுக்கு பதில் பேச, இடையில் பேசிய பிரியங்கா, “லூசு என்று சொல்வதெல்லாம் சாதாரணம். மெண்டல் என்பது வேற விதமான வார்த்தை” என்று விளக்கிக் கொண்டிருந்தார்.
இப்படி கொஞ்ச நேரம் தாமரையும் மதுமிதாவும் முட்டிக்கொண்டு பிக்பாஸ் வீட்டையே அதிர வைத்தனர். அடுத்த சில நிமிடங்களில் இது ஒரு டிராமா என்று இருவரும் அறிவித்து அனைவருக்கும் மேலும் அதிர்ச்சி கொடுத்தனர்.