கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிட்டத்தட்ட 50 நாள்களுக்கு மேலாக சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை 20 நபா்களைக் கொண்டு நடத்த அரசு அனுமதி கொடுத்தது.
குறைந்த எண்ணிக்கையில் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா் சம்மேளனமும், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளா் சங்கத்தினரும் அமைச்சர் கடம்பூா் ராஜுவை சந்தித்து, 50 நபர்கள் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் ஆகையால் அதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்கள் திரைத்துறை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு முடங்கியிருந்தது. அண்மையில் சின்னத்திரை படப்பிடிப்புகளைத் தொடரலாம் என்று அரசு அனுமதி அளித்தது. ஆனால் ஷூட்டிங்கில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிபந்தனை விதித்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையில் ஷூட்டிங்கை நடத்த இயலாத நிலையில், தென்னிட்ந்ஹிய திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் இணைந்து அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து ஒரு கோரிக்கை விடுத்தது. அதில் படப்பிடிப்புக்கு 50 நபர்களுக்கு அனுமதி வழங்குமாறு அந்தக் கோரிக்கையில் கேட்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அக்கோரிக்கை ஏற்ற அரசு நடிகர்கள், டெக்னிஷீயன்கள் உள்ளிட்ட 60 நபர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது. சின்னத்திரை ஷூட்டிங் எப்போது துவங்குவது, எப்படி நடத்துவது என்பது போன்ற முக்கியமான முடிவுகளை குறித்து ஒரு ஆலோசனை கூட்டம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடைபெற்றது. இதில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுஜாதா மற்றும் மெகா தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது.