www.garudavega.com

உயிர் காக்கும் பணியில் இறங்கிய பிரபல டெலிவிஷன் தம்பதி!.. தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பெருந்தொற்று அன்றாடம் ஆயிரமாயிரம் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிகிச்சைக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுக்கும் பணியை டெலிவிஷன் பிரபலங்களான அமித்பார்கவ், ஸ்ரீரஞ்சனி முன்னெடுத்துள்ளனர்.

Tv fame Amit Bhargav Sriranjani oxygen cylinder donates forum

இதற்காக அவர்கள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதியை தேர்வு செய்துள்ளனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது.

இந்நிலையில், கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக, சின்னித்திரை பிரபலங்களான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி நிதி திரட்டி வருகின்றனர். அமித் பார்கவ் ஜீ தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவந்தார். தற்போது அதே சேனலில் திருமதி ஹிட்லர் தொடரிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீரஞ்சனி பாடகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். கூடவே சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக, சின்னித்திரை பிரபலங்களான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி  தம்ம்பதியர் நிதி திரட்டி வருகின்றனர். இதனை, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கவும், ஆம்புலன்ஸ் சேவைகளை  அதிகரிக்கவும் பயன்படுத்தத்  திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் இந்த நற்செயலில், 2018ம் ஆண்டு முதல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களுக்காக பல்வேறு நற்பணிகளை செயல்படுத்தி வரும் தஞ்சையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் நாகராஜனும் பங்கேற்கிறார். அமித், ஸ்ரீரஞ்சனி முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தில், கைகோர்த்துள்ள நிமல், திரட்டப்படும் நிதி மூலம் வாங்கப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் உதவியாக இருப்பார். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார். இதுவரை அமித், ஸ்ரீரஞ்சனி மற்றும் நிமல் திரட்டியுள்ள பணத்தின் மூலம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

அவை பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தஞ்சை பகுதியின் தேவையைத் தீர்க்க இன்னும் 16 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மக்களின்  உயிர்காக்கும் இந்தப் பண்யில் நல் உள்ளம் கொண்டோர்இணைய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ALSO READ: 'அம்பாசமுத்திரம் அம்பானி' ஹீரோயினுக்கு அபராதம்!.. சாதி சான்றிதழ் விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மற்ற செய்திகள்

Tv fame Amit Bhargav Sriranjani oxygen cylinder donates forum

People looking for online information on Amit Bhargav, CovidRelief, Sriranjani will find this news story useful.