www.garudavega.com

"கலைஞர்கள் மது குடிப்பதில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும்" - கோவை குணா மரணம்.. ஆதவன் வேதனை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக மக்களிடையே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி புகழடைந்தவர் கோவை குணா. ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

TV artist Aathavan Kovai Guna demise கோவை குணா

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “மணி Sir-க்கு பாட்டு எழுதுனா இவ்ளோ கவனிப்பாரா..?” - பாடலாசிரியர் சொன்ன சீக்ரெட்ஸ்..   

இதனை தொடர்ந்து குணா ‘சென்னை காதல்’ எனும் படத்திலும் நடித்திருந்தார். ஸ்டான்ட் அப் காமெடியாக இருந்தாலும் சரி, மிமிக்ரியாக இருந்தாலும் சரி குணா சில வினாடிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுபவர். கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களின் குரலில் பேசி பல்லாயிரக்கணக்கான மக்களை ரசிகர்களாக பெற்றவர். இந்நிலையில் உடல்நிலை நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் குணா அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்திருக்கிறார்.

TV artist Aathavan Kovai Guna demise கோவை குணா

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இவர் குறித்து பேசிய நகைச்சுவை கலைஞர் ஆதவன்,  “கோவை குணா அவர்கள் பல வருடங்களுக்கு முன்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பெர்ஃபார்ம் பண்ணும்பொழுது நாங்கள் எல்லாம் கவனித்தோம். அதன்பிறகு அவரைப் பற்றி தெரிய வந்தது. சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு முன்பாகவே, கோவையில் பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக செய்தவர். அவருடைய மரணம் வேதனையில் ஆழ்த்துகிறது. கடைசி சில காலங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அது இன்னும் கவனத்தில் இருந்தால் அவர் நலமாகி இருப்பார். ஆனால் கலைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. பொதுவாக வேலைக்கு செல்பவர்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். ஆனால் இது போன்ற பணியைச் செய்பவர்களுக்கு நிறைய நேரங்கள் கிடைக்கின்றன.

TV artist Aathavan Kovai Guna demise கோவை குணா

Images are subject to © copyright to their respective owners.

பலருடன் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, அதை தொடர்ந்து உரையாடுவது, அவர்களுடன் மது குடிப்பது, பொழுதை கழிப்பது என பழக்கங்கள் இருக்கின்றன. எதுவாக இருந்தாலும் பணி முடிந்து குடும்பம், குழந்தைகளை நினைத்து பார்க்க வேண்டும். மதுவை  கலைஞர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அது அளவுக்கு மீறும் பொழுது இது போன்ற வேதனைகள் நடக்கின்றன. அதிலும் நகைச்சுவை கலைஞர்களின் மரணம் துயரத்தில் ஆழ்த்துவது இன்னும் வேதனை. மற்றவர்களை சிரிக்க வைக்கிறார்கள், அவர்களுக்குத்தான் இவ்வளவு மன அழுத்தம் என்று சொல்லும் பொழுது வேதனையாக இருக்கிறது. அவர் குடித்தார் என்பதை இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை, அக்கறையில் தான் சொல்கிறோம். மயில்சாமி அண்ணனும் இப்படியான மது பழக்கங்களில் இருந்தார். ஆனாலும் பைபாஸ் சர்ஜரிக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தார். இருப்பினும் கலைஞர்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

Also Read | வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதியின் ‘விடுதலை’ .. பார்ட் 2 குறித்த செம அப்டேட்..

"கலைஞர்கள் மது குடிப்பதில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும்" - கோவை குணா மரணம்.. ஆதவன் வேதனை.. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

TV artist Aathavan Kovai Guna demise கோவை குணா

People looking for online information on Aadhavan, Kovai Guna, Madurai Muthu will find this news story useful.