சின்னத்திரை நடிகை நிலானி கமிஷனர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''எனக்கு நடந்த பிரச்சனைகள் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுனால என் வாழ்க்கைய மொத்தமா சரிச்சுவிட்டுச்சு.
என் நம்பர் சமூக வலைதளங்களில் பரவியது. சில பேர் எனக்கு ஃபோன் பண்ணி ஹெல்ப் பண்ணாங்க. சின்ன சின்ன உதவிகள் செஞ்சாங்க.
அப்படி எனக்கு ஒருத்தர் மேரேஜ் புரொபோஸ் பண்ணி டார்ச்சர் பண்ணாங்க. நிராகதையா நிற்கிறேன். எந்த வாழ்வாதாரமும் இல்லாத சூழ்நிலையில் தப்பே பண்ணாம கெட்ட பெயர் வாங்கிட்டேன். சரி கல்யாணம் பண்ணிக்கலாமானு ஒரு சூழ்நிலையில் முடிவெடுத்தேன்.
பெற்றோர்கள் சம்மந்தம் இல்லாம நான் பண்ணமாட்டேன். இந்த காலத்துல ரெண்டு குழந்தையோட வாழ்க்கை கொடுக்குற யோக்கியமானவங்கள நான் பார்க்கல.
இந்த கல்யாணத்துல அவர் அவசரப்படுறமாதிரி தெரிஞ்சது. விசாரிச்ச பார்கிறப்போ அவர் ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை உள்ளவருனு தெரிஞ்சது.
பின்னர் என்னோட நம்பர எல்லோருக்கும் அனுப்பிருக்காங்க. நிறைய பேர் எனக்கு ஃபோன் பண்ணி, மெசேஜ் பன்றாங்க. என் ஃபோனை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க. என் போன் என் அனுமதியில்லாமல் இயங்குது. எவன் எவனோ கூப்டு என்னென்னமோ பேசுறான். அதுபத்தி புகார் அளிக்கதான் வந்திருக்கேன். மார்பிங் பண்ணி வீடியோ போடுறாங்க'' என்றார்.