கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன்.
Also Read | "அன்பு செலுத்த அச்சப்பட வேண்டாம்".. வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!
இதற்கு காரணம், தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின. டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன், சில வழக்குகளில் சிக்கி இருந்தார். இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வாசன், தனது முதுகில் ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. ரசிகர்களின் முகத்தை ஒரே அமர்வில் பச்சை குத்த 27 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆனதாக வாசன் கூறியிருந்தார். இதனை பாராட்டி கலாம் உலக சாதனை நிறுவனம் பாராட்டி உலகசாதனை சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் வாசன், TTF Pit Shop என்ற பெயரில் பைக் ரைடு செய்யும் நபர்களுக்கு தேவையான உபகரணங்களை விற்கும் கடையை திறக்க உள்ளார். இதற்காக கடையை தேர்ந்தெடுத்து உள் அலங்காரம் செய்வதற்கு பூஜையும் போட்டுள்ளார்.
இதற்காக 10 லட்ச ரூபாயை செலவழித்து உள்ளதாக வாசன் கூறியுள்ளார். TTF கல்யாண மண்டபம், TTF ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் திறக்க வேண்டும் என்று தனது ஆசையையும் வாசன் வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் 99 கடைகளை திறக்க வேண்டும் என்றும் வாசன் பேசியுள்ளார்.
Also Read | GOLDEN GLOBE: அமெரிக்காவில் குடும்பத்துடன் ராம்சரன் & Jr NTR.. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் RRR!