VTK M Logo Top
www.garudavega.com

PONNIYIN SELVAN: புதிய லுக்கில் நந்தினி & குந்தவை.. செம்ம 'நச்' கேப்சன் போட்டு த்ரிஷா பகிர்ந்த போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Trisha shared Ponniyin selvan movie new look poster

சுபாஸ்கரன் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும்,

மணி த்னம் இயக்கியுள்ள "பொன்னியின் செல்வன்" படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொரு புறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் நடிகர் நடிகைகள் இறங்கியுள்ளனர்.

Trisha shared Ponniyin selvan movie new look poster

ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, குந்தவையாக வரும் த்ரிஷா ஆகியோர் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்.

விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இருந்த பெயரை ஆதித்த கரிகாலன் என மாற்றியுள்ளார். அதேபோல் 55 லட்சம் Follower-களை கொண்ட த்ரிஷா தன்னுடைய பெயரை குந்தவை என பதிவிட்டுள்ளார். மேலும் Profile புகைப்படங்களையும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் தங்கள் கதாபாத்திரதின் புகைப்படங்களை வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அதேபோல் தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் சென்னை, கேரளா, கர்நாடகா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட படத்தின் புதிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா பகிர்ந்துள்ளார். நந்தினி மற்றும் குந்தவை கதாபாத்திரத்தின் புதிய லுக்கை பதிவிட்டு "இரு பெண் புலிகள்" என பதிவிட்டுள்ளார்.

Trisha shared Ponniyin selvan movie new look poster

இந்த புதிய போஸ்டர்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Trisha shared Ponniyin selvan movie new look poster

People looking for online information on Ponniyin Selvan, PS1 will find this news story useful.