தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்ததாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியுடன் ‘96’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கி வரும் ‘ராங்கி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இதன் ஷூட்டிங் ஸ்பாடில் நடிகை த்ரிஷா திடீரென மயங்கி விழுந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், இதற்கான காரணங்கள் பற்றியும், இந்த சம்பவத்திற்கு மறுப்பும் என பல தகவல்கள் உலாவின.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, ராங்கி டீமிடம் கேட்டபோது அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என திட்டவட்டமாக மறுத்ததுடன், வெற்றிகரமாக திட்டமிட்டபடி படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் விடுமுறை கொண்டாடி வரும் த்ரிஷா அதனை முடித்த பின், ‘ராங்கி’ படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகளை தொடங்குவார் என தெரிகிறது. இந்நிலையில், நாளை மே.4ம் தேதி த்ரிஷாவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள 60வது படமான ‘பரமபத விளையாட்டு’ படத்தின் டிரைலர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
திரையுலகில் 16 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள த்ரிஷா, அடுத்தடுத்து சில நல்ல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.