ஐதராபாத்: லத்தி படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு ஏற்படும் வீடியோ நெஞ்சை பதற வைத்துள்ளது.
விஷால், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'எனிமி'. ஆனந்த் ஷங்கர் இயக்கிய இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் உருவான 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்திருந்தார் விஷால். இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
வீரமே வாகை சூடும் ரிலீஸ்
"வீரமே வாகை சூடும்" திரைப்படம் கடந்த 4ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றது. போலீஸ் அதிகாரியாக ஆக நினைக்கும் ஒருவரின் வாழ்க்கையில் பிரச்னைகள் எப்படி எல்லாம் வருகிறது என்பதை மிகவும் சுவாரஸ்யமாக வெளிவந்திருந்தது. பாண்டியநாடு படத்திற்கு பிறகு யதார்த்தமான கதாப்பாத்திரத்தில் விஷால் நடித்து பாராட்டை பெற்றுள்ளார். இந்நிலையில், "வீரமே வாகை சூடும்" படம் வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் விஷால் "லத்தி" படப்பிடிப்பில் பங்கேற்றார்.
லத்தி படப்பிடிப்பு
'பாயும்புலி', 'அயோக்கியா' படத்திற்கு பிறகு இப்படத்தில் மீண்டும் போலீஸ் கெட்டப்பில் விஷால் நடிக்கிறார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த சூட்டிங்கில் கலந்து கொண்ட அவர், சண்டைக்காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட விபத்தில் விஷாலுக்கு என்று கூ எலும்பு முறிவு (ஹேர்லைன் பிராக்சர்) ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எலும்புகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திக் திக் வீடியோ
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கேரள சென்றுள்ளார். 3 வாரம் அங்கு தங்கியிருக்கும் விஷால், எலும்பு முறிவுக்கான சிகிச்சையை தொடர உள்ளார். எலும்பு முறிவு சரியான பிறகு மீண்டும் லத்தி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். எனவே, மார்ச் முதல் வாரத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாக விஷால் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'லத்தி' படத்தை அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்குகிறார். விஷாலின் 32வது படமான இதில் சுனைனான நாயகியாக நடிக்கிறார். நந்தா மற்றும் ரமணா ஆகியோர் கூட்டாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.
'லத்தி' படத்தை அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்குகிறார். விஷாலின் 32வது படமான இதில் சுனைனான நாயகியாக நடிக்கிறார். நந்தா மற்றும் ரமணா ஆகியோர் கூட்டாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.
Suffered multiple hairline fractures during the filming of this stunt sequence in #Laththi.
Off to #Kerala to rejuvenate myself!
Will join the crew for the final schedule from March first week 2022. GB. pic.twitter.com/L1pOByb6hZ
— Vishal (@VishalKOfficial) February 11, 2022