IMDb எனும் Internet Movie Database ஒவ்வொரு வருடமும் அந்த வருட இறுதியில் மிகச்சிறந்த படங்களின் பட்டியலை வெளியிடும்.
இந்த 2021 வருடத்தில் வெளியான படங்களில் சிறந்த பிரபல இந்திய படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஜெய் பீம்' திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்தப் படத்தினை பார்த்து பாராட்டினர். ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் இந்தியா சார்பாக இடம் பெற்றுள்ளது. 'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.
விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் திரைப்படததை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த மாஸ்டர் படம் 2021 வருடத்தில் வெளியான படங்களின் IMDb பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
அதே போல் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான "கர்ணன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வணிக ரீதியிலும், கலை ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தன. கர்ணன் படம் IMDb பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
As 2021 comes to an end, we look back at 10 of the most loved Indian movies of the year that consistently remained popular with IMDb users. 🎥❤️ Did your favorite film make the list? #IMDbBestofIndia2021 pic.twitter.com/2KkW1r3chF
— IMDb (@IMDb) December 9, 2021