இந்தியா: கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பங்கராஜு (2022) - தெலுங்கு
இந்த படத்தில் நாகார்ஜுனா, அக்கினேனி நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணன், க்ரிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனுப் ரூபன்ஸ் படத்திற்கு இசையமைக்கிறார். சத்யானந்த் திரைக்கதை எழுதியுள்ளார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளியான இந்த படம் ஜி5 (Zee5) ஒடிடியில் வெளியாகிறது.
எனிமி (2021) - தமிழ்
இருமுகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய 'எனிமி' படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இரண்டாவது முறையாக சேர்ந்து நடித்தனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2021 தீபாவளிக்கு இந்த படம் வெளியானது. 'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குநராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்து வருகிறார்கள். இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். Sony Liv ஒடிடியில் இந்த படம் வெளியாகிறது.
83 (2021) - தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்
இந்தியை மூலமாக கொண்டு ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் உருவாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியானது. இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றியது.
இந்த படம் 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனை மையமாக வைத்தும் கபில்தேவின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டும் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ரோலில் தமிழ் நடிகர் ஜீவாவும், கபில் தேவாக நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோனே இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் இந்தியில் நெட்பிளிக்ஸ் தளத்திலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழியில் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகி உள்ளது.
ஹிரிதயம் (2022) - மலையாளம்
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹிரிதயம். கடந்த ஜனவரி 21,2022 அன்று வெளியாகி இன்றும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வினித் சீனிவாசன் இயக்கிய இந்த படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
இந்தபடங்களுடன் 96 தெலுங்குப் படம், ஆஹா தெலுங்கு ஒடிடியில் வெளியாகிறது. சரத்குமார் நடித்த இரை வெப் தொடரும் ஆஹா தமிழ் ஒடிடியில் வெளியாகிறது. விமல் நடித்த விலங்கு வெப் தொடரும் ZEE5 ஒடிடியில் வெளியாகிறது.
#SK20: 80's Retro கெட்டப்பில் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி! BTS புகைப்படங்களுடன் வைரலாகும் வீடியோ!