விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் குழந்தை பெற்றுக் கொண்டது தொடர்பாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read | GP Muthu : முதல் நாள் பயந்த ஜிபி முத்து.. மழையை பார்த்ததும் ஆட்டம் போட்டு கும்மாளம்.! bigg boss 6 tamil
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர்.
மகாபலிபுரத்தில் வைத்து நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
மேலும் இந்த பதிவை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், "ஐ லவ் யூ டூ & ஐ லவ் யூ த்ரி" என பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தைகளின் புகைப்படங்களுடன் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புது திருமண ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது தொடர்பாக தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில கருத்துக்களைத் தற்போது தெரிவித்துள்ளார்.
இது பற்றி பேசும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், "திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது 35 வயதுள்ள பெண்கள், பெற்றோர்கள் அல்லது கணவரின் ஒப்புதலுடன் கருமுட்டைகளை தரலாம் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இது சாத்தியப்பட்டிருக்கலாம் என்று தான் கருதப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவ ஊரகப் பணிகள் இயக்குனரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்போது தான் முறையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Also Read | ஏறுமயிலேறி.. வெளியானது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் முதல் சிங்கிள்..!