OFFICIAL: ஆர்ஜே பாலாஜி டைரக்டராக களமிறங்கும் படத்தில் அம்மனாக நடிக்கும் நயன்தாரா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக களமிறங்கிய படம் எல்கேஜி. அரசியலை மையமாக வைத்து உருவாகியிருந்த படத்துக்கு ஆர்ஜே பாலாஜி திரைக்கதை எழுதியிருந்தார்.

Title Look is out from RJ Balaji Nayanthara's Mookuthi Amman

இந்த படத்தில் பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஆர்ஜே பாலாஜி நடிக்கவுள்ள புது படத்துக்கு 'மூக்குத்தி அம்மன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி என்ஜே சரவணனுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கவிருக்கிறார்.  இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி K.கணேஷ் தயாரிக்கவுள்ளார்.  இந்த படம் வருகிற சம்மரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நயன்தாராவும் ஆர்ஜே பாலாஜியும் 'நானும் ரௌடி தான்', 'வேலைக்காரன்' படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Title Look is out from RJ Balaji Nayanthara's Mookuthi Amman

People looking for online information on Mookuthi Amman, Nayanthara, RJ Balaji will find this news story useful.