ஜேம்ஸ் கேமரூனின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘டைட்டானி’ மீண்டும் புதிய தரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read | வைரலான ‘வாரிசு’ போஸ்டர்கள்… விஜய்யை ஸ்டைலாக ’click’ செய்தது இந்த பிரபலம்தான்
டைட்டானிக்
டெர்மினேட்டர் மற்றும் டைட்டானிக் போன்று வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், உலகளவில் புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரான். அவர் இயக்கிய படங்கள் எல்லாம் உலகளவில் வசூலிலும் விமர்சனத்திலும் சாதனைப் படைத்தன. அந்த வகையில் உலக சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம்தான் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ திரைப்படம்.
25 ஆண்டுகளை நிறைவு செய்யும் டைட்டானிக்
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள் சிக்கிய உண்மைக் கதையில் புனைவாக ஒரு காதல் ஜோடிகளை இடம்பெறச் செய்து திரைக்கதையை உருவாக்கி இருந்தார். உலகம் முழுவதும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் பல வருடங்களாக உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்திருந்தது. அதன் பின்னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியயாக் 2009 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூலித்து அந்த சாதனையை தகர்த்தது.
இந்நிலையில் இப்போது டைட்டானிக் திரைப்படத்தின் 25 ஆண்டு நிறைவை ஒட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது. 3D, 4K, HDR ஆகிய உயர் தரங்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அவதார் 2 ரிலீஸ்..
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 அவதார் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. அவதார் 2 ரிலீஸ் ஆகவுள்ளதை அடுத்து அவதார் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் புதிய தரத்தில் மறு உருவாக்கம் செய்து வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர், டிசம்பர் மற்றும் 2023 பிப்ரவரி என அடுத்தடுத்து சிறு இடைவெளியில் ஜேம்ஸ் கேமரூனின் 3 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு Triple Treat ஆக அமைந்துள்ளது.
Also Read | 25 நாளுக்குப் பிறகும் கேரளாவில் மாஸ் காட்டும் ‘விக்ரம்’… விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் Tweet