டிக்டாக் பிரபலமும் ஹரியான மாநில பாஜக உறுப்பினருமான சோனாலி போகட், அரசு அதிகாரி ஒருவரை மக்கள், போலீஸ் முன்னிலையில் செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
டிக்டாக்கில் பதிவிடும் வீடியோ மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சோனாலி போகட், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் நேற்று (06/06/2020) சோனாலி போகட் உழவர் சந்தைக்கு அப்பகுதி விவசாயிகளுடன் பார்வையிட சென்றுள்ளார்.
அங்கே உழவர் சந்தை சங்க உறுப்பினர் சுல்தான் சிங்குடன் சோனாலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுல்தான், சோனாலியை பார்த்து தவறான வார்த்தையை பிரயோகித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சோனாலி பொதுமக்கள் முன்னிலையில் சுல்தானை செருப்பால் அடித்துள்ளார். தற்போது இருவர் மீதும் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனராம்.
இந்த சம்பவம் குறித்து பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், சோனாலி போகட்டை சுல்தான் சிங் துஷ்பிரயோகம் செய்தபோது, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்களா?. அவர் சட்ட வழியில் சென்றால், அவர் என்னைப் போலவும்,, மற்ற பெண்களை போலவும் நீதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இதுவே சிறந்தது, சோனாலி, சுல்தானை அங்கேயே தண்டித்திருக்கிறாள்'' என்று தெரிவித்துள்ளார்.
All u sickos asking how can she hit a govt official. Can a govt official on duty denigrate a woman ?
Sonali Phogat gave it good to that cheapo. Sultan Singh was guilty, he deserved it, that is why he is pleading and police and public are watching calmly. 1/2 pic.twitter.com/XqOyzUSGFq
— Kasturi Shankar (@KasthuriShankar) June 5, 2020