www.garudavega.com

"நடிக்குறது கஷ்டம்ப்பா!".. டிக்டாக் இலக்கியாவின் ‘புதிய’ படத்துக்கு ‘ஏ’ சர்டிஃபிகேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்களை பதிவேற்றி, ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா.

tiktok elakkiya new movie got A certificate in censor

இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் "டிக்டாக் இலக்கியா " என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து 'நீ சுடத்தான் வந்தியா' என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

tiktok elakkiya new movie got A certificate in censor

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ்  இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கைத் துறையின்  'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், அதை தணிக்கை செய்வதற்காக 4 பேர் கொண்ட குழுவிற்கு இந்த படத்தை அனுப்பவே, அங்கும் ஒரு முடிவு எட்டப்படாமல் 8 பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது. இறுதியில் இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படி ஒருவழியாக 'ஏ' சான்றிதழ் பெற்று விட்ட இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

tiktok elakkiya new movie got A certificate in censor

இப்படத்தைத் தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அருண்குமார். அவர் தனது அனுபவம் பற்றி கூறும்போது, "படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை. நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா? என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம்தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

tiktok elakkiya new movie got A certificate in censor

எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நான்  தயாரிப்பாளர் என்பதால்  நடிக்க விரும்பவில்லை. பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை. எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு, முன்தயாரிப்பாகக் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். பிறகுதான் நடிக்க வந்தேன். எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம்தான் கதாநாயகி ‘டிக் டாக்’ இலக்கியா  இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார். இயக்குநர் சொன்னபடி நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தார்.” என குறிப்பிட்டுள்ளார்.

tiktok elakkiya new movie got A certificate in censor

இதேபோல் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் 'டிக் டாக்' இலக்கியா இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசும்போது, "இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர, படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. படக் குழுவில் இயக்குநர்  சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக, பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும். என்னையும் வாழ்த்த வேண்டும்" என்கிறார்.

tiktok elakkiya new movie got A certificate in censor

இப்படத்தை இயக்குநர் துரைராஜ் இயக்க, ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ், இசையமைப்பாளர் துரைராஜன், பாடலாசிரியர் லோகேஷ் என ஆர்வமுள்ள பலரும் இணைந்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை சக்தி சரவணன் கவனித்துக்கொண்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர்  ஏற்கனவே வெளியாகியுள்ளது.

tiktok elakkiya new movie got A certificate in censor

கதாநாயகி இலக்கியா பற்றி ஆயிரம் விமர்சனங்கள் பேசப்பட்டாலும் சமூக ஊடகங்களில் பலவாறாகச் சீண்டப்பட்டாலும் படக்குழுவினருக்கு அவர் தந்த ஒத்துழைப்பைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகையாக அவர் தனது கடமையைச் சரிவரச் செய்தார் என்று கூறுகிறது படக்குழு. விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. 

Also Read: பிக்பாஸ் கேபியுடன் ‘அப்பா’ படத்துல நடிச்ச பொண்ணா இது?.. இப்ப எப்படி இருக்காங்க பாருங்க.. செம்மயா வெளியான புது பட அப்டேட்!

Also Read: 'சின்னத்திரை' நடிகையின் சோக முடிவு!.. ‘மரணக் குறிப்பில்’ கண்கலங்க வைக்கும் காரணம்!

மற்ற செய்திகள்

Tiktok elakkiya new movie got A certificate in censor

People looking for online information on Neesudathanvanthiya, Tiktok elakkiyacensor elakkiya will find this news story useful.