துணிவு படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 1.3 மில்லியன் லைக்குகளுடன் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ய நாடுகளில் துணிவு படத்தின் FDFS டிக்கெட் முன்பதிவு ஒரு மாதங்களுக்கு முன்பே துவங்கி உள்ளது. சினி வேர்ல்ட் செயின் திரையரங்குகளில் இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது என லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து நேரப்படி ஜனவரி மாதம் 11 ஆம் தேதிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
UK 🇬🇧 get ready for #THUNIVU 💥 FDFS 🤩 BOOKINGS NOW OPEN 🎟️ at @cineworld 📽️#ThunivuPongal 💥#AjithKumar 😎 #HVinoth 🎬 @BoneyKapoor @ZeeStudios_ 🪙 @BayViewProjOffl @mynameisraahul #RomeoPictures @LycaProductions @gkmtamilkumaran @Tentkotta @BoleynCinema 🤝🏻 pic.twitter.com/dULhvThlkF
— Lyca Productions (@LycaProductions) December 14, 2022