www.garudavega.com
iTechUS

'துணிவு' பட DELETED SCENES அடங்கிய முழு வெர்சன்.. இதுல தான் ரிலீஸ் ஆகும்!.. நடிகை மஞ்சு வாரியர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Thunivu Deleted Scenes in Netflix version Manju Warrier Exclusive

பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Deleted Scenes in Netflix version Manju Warrier Exclusive

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Thunivu Deleted Scenes in Netflix version Manju Warrier Exclusive

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை துணிவு படத்தின் ரிலீஸ்க்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். அதில், "துணிவு படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து இயக்குனர் வினோத்திடம் பேசிய பொழுது, "நீக்கப்பட்ட ஒரிரு காட்சிகளும் வெளியாகும்" என வினோத் கூறினார். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் துணிவு படம் வெளியாகும் போது துணிவு படம் முழு வெர்சனில் இருக்கும் என நினைக்கிறேன்" என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

'துணிவு' பட DELETED SCENES அடங்கிய முழு வெர்சன்.. இதுல தான் ரிலீஸ் ஆகும்!.. நடிகை மஞ்சு வாரியர் EXCLUSIVE! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Deleted Scenes in Netflix version Manju Warrier Exclusive

People looking for online information on Ajith Kumar, Netflix, Thunivu will find this news story useful.