தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | “பாய் ஃப்ரன்ட் இல்லனா என்ன.. இது தான் முக்கியம்” - ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்த தரமான Post..!
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித் ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார், நேற்று காலை சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் & விமான நிலைய ஊழியர்கள் அஜித்துடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியேற, நடிகர் அஜித் நடந்து வரும் போது, துணிவு படத்தில் அஜித் அணிந்த உடை போல உடையணிந்த சிறுவன் ஒருவர், அஜித்துடன் சேர்ந்து போட்டோ எடுக்க முயற்சி செய்தார். அச்சிறுவன் வருவதை கண்ட அஜித், அச்சிறுவனின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Kutty Thala Fan in Dark Devil constume
😘😘😘😘#AK62 #AjithKumar pic.twitter.com/bqLX9E3vZu
— Billa Prabha Pollachi (@PrabhaAjithFan) February 16, 2023
Also Read | பிரபல தமிழ் நடிகர் கையில்.. தோனி பயன்படுத்திய கிரிக்கெட் பேட்.. வைரலாகும் ட்வீட்!!