அண்மையில் 3 தேசிய விருதுகளை பெற்ற திரைப்படம் அந்தாதுன் என்கிற இந்திப்படம்
அயுஷ்மன் கிர்ரானா, தபு, ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்து இந்தியில் செம்ம ஹிட் ஆன இந்த படம் பிளாக் காமெடி க்ரைம் தில்லர் ஜானரில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் பெற்றது.
3 தேசிய விருதுகளை குவித்த இந்த படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்ட இந்த இப்படத்தின் தமிழ் ரீமேக்கை தியாகராஜன் இயக்க, அவரது மகனும் நடிகருமான பிரஷாந்த் தற்போது நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதில் தபு கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார்.
அந்தகன் என்கிற பெயரில் ரீமேக் ஆகும் இந்த படத்தை முன்னதாக பொன் மகள் வந்தால் ஜே.ஜே.ஃபெடரிக் இயக்குவதாக இருந்த நிலையில், அவர் இப்பட பணியில் இருந்து விலகியதுடன் படக்குழுவுக்கு வாழ்த்தும் சொல்லியிருக்கிறார். இதனிடையே பிரஷாந்த் கீபோர்டு வாசிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
தியாகராஜன் பிரஷாந்த் நடிப்பில் ‘ஆணழகன்’, ’பொன்னார் சங்கர்’,’ஷாக்’ ’மம்பட்டியான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் என்பதும் நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரி மாணவர் என்பதும் சிறந்த பியானோ கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: நயன்தாராவுக்கு பிறகு, சீதையாக பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் தேசிய விருது நடிகை!