தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மிகவும் பரபரப்பாக ஏப்ரல் 6ஆம் தேதியான இன்று நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் ஜனநாயக உணர்வுடன் அவரவரின் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவான்மியூரில் காலையிலேயே முதல் ஆளாக அஜித்குமார் தன்னுடைய மனைவியும் நடிகையுமான ஷாலினியுடன் வருகை தந்து தமது வாக்கை பதிவு செய்யத் தயாரானார்.
அப்போது அவரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது. அதில் ஒரு ரசிகர் அஜித்துடன் எந்தவித அனுமதியும் இன்றி செல்பி எடுக்க முயன்றார். அப்போது அந்த செல்போனை அஜித் பிடுங்கிக் கொண்ட விஷயம் வீடியோவாக வெளியாகி வைரல் ஆனது. பலரும் அஜித் செல்போனை பிடுங்கிய அந்த வீடியோவை தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால் Behindwoods சேனலின் எக்ஸ்க்ளுசிவ் வீடியோ ஒன்றில் அஜித் செல்ஃபி எடுக்கும் போது செல்போனை பிடுங்கிய அந்த ரசிகரிடம் மீண்டும் செல்போனை திருப்பிக் கொடுத்து ஒரு சிறிய எச்சரிக்கை ஒன்றை செய்துவிட்டு கொடுக்கிறார்.
எப்போது எங்கு சென்றாலும் பிரைவேசியை விரும்பக்கூடிய மனிதரான அஜித் ஏற்கனவே ஒரு முறை மருத்துவமனை சென்றபோது அங்கு தம்மை வீடியோ எடுக்க வந்த கேமராமேனிடம் இங்க வேணாமே? என தன்மையாக எடுத்துச் சொல்லியிருந்தார். இந்த நிலையில் அஜித் செல்போனை அந்த ரசிகரிடம் திருப்பி கொடுத்த அந்த காட்சிகள் Behindwoods சேனல் வீடியோவில் பதிவாகி இருக்கின்றன.
அஜித் மட்டுமல்லாமல் பல திரைப் பிரபலங்கள் பலரும் இப்படி பிரைவேசியை விரும்பக் கூடியவர்களாகவே இருப்பதால் ரசிகர்கள் செல்ஃபி எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட செலிபிரிட்டிகளிடம் ரிக்வஸ்ட் செய்து அனுமதியை பெற்று எடுக்க வேண்டும் என்பதே ஏகோபித்த மக்களின் கருத்து கருத்தாக உள்ளது. இன்னொருபுறம் அது திருவான்மியூர் வாக்குச் சாவடி அங்கு செல்ஃபி எடுக்க வேண்டிய தேவை என்ன? என்பதும் பலரது கருத்தாக உள்ளது. இந்த வீடியோவை இணைப்பில் காணலாம்.