இந்த ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Also Read | பிரகாஷ் ராஜை வெறுப்பேற்றும் கார்த்தி.. வைரலாகும்'விருமன்' படத்தின் SNEEK PEEK காட்சி!
கார்கி
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சாய்பல்லவி நடித்த ’கார்கி’ படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பள்ளி ஆசிரியராக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான சோனி லிவ் கைப்பற்றி உள்ளது.
நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் கார்கி திரைப்படம் சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மலையன்குஞ்சு
பகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள 'மலையன்குஞ்சு' திரைப்படம் ஒரு சர்வைவல் திரில்லர் திரைப்படம்.
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, மலையன்குஞ்சு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை சஜிமோன் பிரபாகர் இயக்கி உள்ளார். மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன், மலையன்குஞ்சு படத்தின் திரைக்கதையை எழுதி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். பகத் ஃபாசிலின் தந்தை ஃபாசில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பகத் ஃபாசிலுடன், ரஜிஷா விஜயன், இந்திரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம், அமேசான் பிரைம் வீடியோவில் இனறு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
கடாவர்
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாவர்'. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.
சபாஷ் மிது
டாப்ஸி பன்னுவின் நடிப்பில், சபாஷ் மிது திரைப்படம், இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மாற்றியமைத்த இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தை Viacom18 Studios தயாரித்துள்ளனர், சபாஷ் மிதுவின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அஜித் அந்தாரே பணியாற்ற, ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் ப்ரியா அவென் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படம் ஜூலை 15 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது.
2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக பல உலக சாதனைகளை முறியடித்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் விவரித்துள்ளது.
நாளை ஆகஸ்ட் 12 முதல் VOOT Select தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது.
Also Read | பாகுபலி ஸ்டைலில் குழந்தையுடன் காஜல் அகர்வால்.. ராஜமௌலிக்கு Dedicate செய்த சூப்பர் ஃபோட்டோ!