இந்த ஜனவரி முதல் வாரம் பிரபல ஓடிடிக்களில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் & சீரிஸ்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ளார். நாய்களை கடத்தும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு இந்த படத்தில் நடித்துள்ளார்.
'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்த
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை (06.01.2023) முதல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் வேதா (இந்தி)
2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.
இந்த படத்தை இந்தியில் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடித்துள்ளனர்.
தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தனர். இந்தியிலும் இசையமைப்பாளர் சாம் CS இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலர்ஸ் சினிப்ளக்ஸ் சேனல் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓடிடி உரிமத்தை வூட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நேற்று ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் வூட் தளத்தில் விக்ரம் வேதா வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்கள் போக, Hit - 2 என்ற தெலுங்கு படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்திலும், The Pale Blue Eye என்ற ஆங்கில திரைப்படம் Netflix தளத்திலும், The Menu என்ற ஆங்கில திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி உள்ளது.
Uunchai இந்தி திரைப்படம் Zee5 தளத்திலும், சௌதி வெள்ளக்கா (மலையாளம்) Sony Liv தளத்திலும், ஷூபிகிந்தே சந்தோஷம் என்ற மலையாள படம், Simply South தளத்திலும் இந்த வாரம் வெளியாகி உள்ளன.
Story Of Things என்ற வெப் சீரிஸ் தமிழில் Sony Liv தளத்தில் வெளியாகி உள்ளது. 3Cs என்ற தெலுங்கு வெப் சீரிஸூம் Sony Liv தளத்தில் வெளியாகி உள்ளது.