தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்தது. இந்த வாக்குப்பதிவு மட்டுமல்லாது கன்னியாகுமரியில் இடைத்தேர்தலும் அதே நாள்ஒரே கட்ட தேர்தலாக நடந்தது.
தொடர்ந்து இந்த வாக்கு பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கும் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது திட்டமிட்டபடி இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக முன்னிலை வகித்தது. இதேபோல் நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் -திருவல்லிகேனி தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் அவர் தனது தொகுதியில் முன்னிலை வகித்தது மட்டுமன்றி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸாலியை சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி செங்கல்லை மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி கொடுக்கிறார். அருகில் உதயநிதியின் மகன் இன்பநிதி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
#DMKwinsTN #AIIMS #TNwithDMK pic.twitter.com/da6aF5k6qW
— Udhay (@Udhaystalin) May 2, 2021
இந்த புகைப்படத்தை உதயநிதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த படம் வைரலாகி வருகிறது.
ALSO READ: முதல் ரவுண்ட்லயே முன்னிலை... முதல் தேர்தலிலேயே மாஸ் காட்டும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்!