நேற்று பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே போட்டிக்கான இரண்டு டாஸ்குகளை பிக்பாஸ் அளித்தார். முதல் போட்டியில் பாலாஜி அனைவரிடமும் அடித்து, பிடித்து பாயிண்டுகளை எடுத்து விட்டார். ஆனால் இரண்டாவது டாஸ்க்கில் சொதப்பி சக போட்டியாளர்களையும் எரிச்சலடைய வைத்தார். பாட்டு தெரிந்தவர்கள் வந்து பஸ்ஸரை அழுத்தலாம் என பிக்பாஸ் ரூல்ஸ் சொன்னார்.
ஆனால் வேகமாக ஒவ்வொரு முறையும் ஓடிவந்தும் கூட பாலாஜி பாட்டு தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றார். இந்த டாஸ்க்கின் முடிவில் ஷிவானி அதிக பாயிண்டுகளை எடுத்து ஆச்சரியப்பட வைத்தார். பாலாஜியால் செம காண்டில் இருந்திருப்பார் போல. அவருக்கு மொத்தமாக ஆப்பு வைத்து விட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி ஏன் இப்படி செய்தார் என விளக்கம் அளித்து வருகின்றனர்.
🙄🙄🙄🙄#BiggbossTamil4 #BBTamilSeason4 #biggbosstamilseason4 pic.twitter.com/kDEzCnbZia
— Karthik Srinivasan (@Karthik_SK17) January 5, 2021
அதாவது தான் வெற்றி பெற வேண்டும் இல்லை என்றால் மற்றவர்கள் வெற்றி பெறக்கூடாது என்பது தான் அவரோட ஸ்ட்ராட்டஜியாம். ஒருவேளை அப்படி இருக்குமோ? நீங்க இதைப்பத்தி என்ன நினைக்குறீங்க?