இந்தியா இசையை விரும்பும் மக்களை கொண்ட ஒரு நாடு. இங்கு திரைப்பட இசை மட்டுமல்லாமல் தனி ஆல்பங்களும் மக்களிடம் வரவேற்பை பெற ஆரம்பமாகியுள்ளன. 90களில் சில சிறந்த சுயாதீனமான தனி இசை ஆல்பங்கள் வரத் தொடங்கின. இருப்பினும், சுயாதீன இசையின் வரவு 2000ஆம் ஆண்டுகளில் பின்தங்கியது. இந்நிலையில், இப்போது தனி ஆல்பங்கள் மீண்டும் வந்து பார்வையாளர்களின் வரவேற்பை தட்டிச் செல்கின்றன.
அவற்றில் மிக முக்கியமான முன்னணி கதாநாயகிகள் தோன்றிய நான்கு ஆல்பங்கள் கீழே உள்ளன.
நித்தி அகர்வால் (சாத் கியா நிபாகே): நித்தி அகர்வாலின் சமீபத்திய சிங்கிள் பாடல், “சாத் க்யா நிபாகே” அதே பெயரில் மிகவும் பிரபலமான கவாலி டிராக்கின் ரீமேக் பாடல். இந்த பாடலில் சோனு சூத் ஒரு போலீஸ்காரராக நடித்துள்ளார், அவர் தனது நீண்டகால இழந்த காதலை நித்தி வடிவத்தில் சந்திக்கிறார். இந்த வீடியோவில் நடிகை நித்தி அகர்வால் முற்றிலும் கவர்ச்சியாகத் தெரிகிறார் மற்றும் அவரது நடனம் பார்வையாளர்களை கவரும் விதமாக உள்ளது.
அலயா எஃப் (ஆஜ் சஜேயா): அலாயா எஃப் சமீபத்தில் புனித் மல்ஹோத்ரா இயக்கிய “ஆஜ் சஜேயா” என்ற இசை வீடியோவில் காணப்பட்டார். ஆலாயாவின் திருமண நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாக இந்த பாடல் வழங்குகிறது. 43 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் (தில் ஹாய் தீவானா): இந்த ஆண்டு தொடக்கத்தில் தில் ஹாய் தீவானா பாடலுக்காக அர்ஜுன் கபூருடன் ஜோடி சேர்ந்தபோது ரகுல் இணையத்தில் பெரும் வைரலை ஏற்படுத்தினார். தனிஷ்க் பாக்சி இசையமைத்த இந்த பாடல் தர்ஷன் ரவால் மற்றும் ஜாரா கான் பாடியுள்ளனர். 53 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா (டாப் டக்கர்): டாப் டக்கர் பாடல், பாடகர் பாட்ஷா பாடி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ஒரு மின்மயமாக்கும் பாடல் இது. உற்சாகமான துள்ளல் இசை பாடலில் நடிகை ராஷ்மிகாவின் நடனம் இணையத்தில் வைரலானது. 103 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மெகா ஹிட் ஆகியுள்ளது.
தனி மியூசிக் வீடியோக்களின் மோகம் மக்கள் மத்தியில் பொங்கி எழும்போது, இதுபோன்ற தனி இசை பாடல்கள் தொடர்ந்து வெளிவரும்.