தமிழ்ப் படங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அளவில் பிரபலமாக அறியப்பட்ட இருபெரும் நட்சத்திரங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியும்.
நடிகையாக தன் பயணங்களைத் தொடங்கிய பின்னர் தான் ஜெயலலிதா அரசியல் பிரவேசம் கொண்டு முதல்வரானார். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்த ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி பிறந்த தினம்.
இதேபோல் ஸ்ரீதேவியும் தமிழில் 80களின் தவிர்க்க முடியாத நாயகியாக இருந்து தென்னிந்தியா, பாலிவுட் வரை சென்றார். போனி கபூரை மணந்தார். 80களின் பிரபலமான நடிகை ஜெயப்ரதா, “ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்!” என்று பிரபல பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் ஸ்ரீதேவி மறைந்தார்.
ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது நடிகை ஸ்ரீதேவியுடன் நடித்துள்ளார். 1971-ம் ஆண்டு ஆதிபராசக்தி படத்தில் சக்தியாக நடித்த ஜெயலலிதா மடிமீது அமர்ந்து நடிகை ஸ்ரீதேவி முருகனாக நடித்திருந்தார்.
The most articulate dignified,cultured & caring lady, lucky to have worked with her. I Along with millions of our people will miss her. pic.twitter.com/ol49dfkyhw
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) December 7, 2016
அந்த போட்டோவை ஜெயலலிதா இறந்த தருணத்தில் ஸ்ரீதேவி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.தற்போது அவரது இந்த ட்வீட் இருவரையும் இந்த நாளில் நினைவுபடுத்தும் நினைவலைகளாக பகிரப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் ஸ்ரீதேவி மறைந்ததும், ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் ஜெயலலிதாவுடன் தான் என்பதும் பேசப்பட்டு வருகிறது.