விக்ரம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் போது திடீரென ஒரு திரையரங்கில் திரையில் தீ பிடித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | கமல் & லோகேஷுடன் விஜய் சேதுபதி… ‘விக்ரம்’ பார்த்துட்டு பிரபல நடிகர் Tweet ...Viral pic
விக்ரம்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
வசூல்…
உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம் என சொல்லப்படுகிறது. அதே போல ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் 3 நாட்களில் மட்டும் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதி நாட்கள் முடிந்து வேலை நாட்கள் தொடங்கிய போதும் தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
திரையரங்கத்தில் விபத்து…
இந்நிலையில் நேற்று பாண்டிச்சேரியில் உள்ள ஜெயா சினிமாஸில் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது கிளைமேக்ஸ் காட்சியின் போது திடீரென திரையில் தீ பற்றியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பதற்றமாகி வெளியேறியுள்ளனர். இது சம்மந்தமான வீடியோக் காட்சிகளை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இது சம்மந்தமாக திரையரங்க ஊழியர்கள் தரப்பில் “விக்ரம் திரைப்படத்தின் நேற்றிரவு காட்சியின் போது படம் விடும் நேரத்தில் திரையின் ஓரத்தில் நெருப்பு பற்றி எரிந்தது. விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.” எனக் கூறியுள்ளனர். மேலும் தற்போது திரையை சரிசெய்யும் பணிகள் நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Also Read | லோகேஷ்க்கு மட்டும் இல்ல… இந்த 13 பேருக்கும் பரிசு… அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த கமல்.!