www.garudavega.com
iTechUS

KANTARA 2 UPDATE : "எதே... நாம பார்த்ததுதான் காந்தாரா 2 -ஆ?".. அடுத்த பார்ட் குறித்து அறிவித்த ரிஷப் ஷெட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள  ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. 

The Version released is Kantara 2 Says Rishab Shetty

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Vaathi : தனுஷின் வாத்தி -யில் டீச்சராக நடித்த ஹீரோயின் படிச்சது இதுவா..?.. அவரே சொன்ன தகவல்..!

காந்தாராவில் ஆடுகளம் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்) இசை படத்தின் இன்னொரு பலமாக அமைந்தது.

திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது. உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்தாக கூறப்படும் இப்படம் பின்னர் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இந்த படம் தற்போது பிரபல அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். இதில் பேசிய இப்படத்தின் ஹீரோவும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி,  “காந்தாராவுக்கு ரசிகர்கள் தந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி..  கடவுளின் ஆசியுடன் 100 நாள்களை காந்தாரா படம் கடந்துள்ளது.

ஒரு ரீஜனல் சினிமாவாக உருவாகி பான் இந்திய சினிமாவாக பிரபலமாகி உலக அளவில் கவனம் பெற்று வெற்றி பெற்றுள்ளது காந்தாரா படம்.  அதே சமயம், பலரும் காந்தார படத்தின் அடுத்த பார்ட்.. அதாவது பார்ட் - 2 எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், நீங்கள் பார்த்ததுதான் 'காந்தாரா' படத்தின் 2-ம் பாகம்.  ஆம், இப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வரும். அதில் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம், குறிப்பிட்ட அந்த தெய்வத்தின் பின்னணி கதைகள் உள்ளிட்டவை காந்தாராவின் அடுத்த பாகத்தில் வெளிவரும். அதற்கான கதை பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதால் காந்தாராவின் அடுத்த பாகம் பற்றிய விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read | “நான் ஸ்டார் இல்லனு கமிட் பண்ணாங்க😅”.. ஜாலியா சொன்ன 'வசந்த முல்லை' ஹீரோயின்..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

The Version released is Kantara 2 Says Rishab Shetty

People looking for online information on Kantara 2, Rishab Shetty will find this news story useful.