சேக்ரட் கேம்ஸ், கேங்ஸ் ஆஃப் வஸேபூர், தலாஷ், மாண்டோ, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மூலம் தன் தனித்துவ நடிப்பால் சிறந்து விளங்கி, உலக திரைப்பட ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக். பாலிவுட் தாண்டி, தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக 'பேட்ட' படத்தில் நடித்து தனி முத்திரையைப் பதித்தார்.
தந்தைக்காக தாஜ்மஹால்
விளிம்பு நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர் நவாசுதீன் சித்திக் என்பது ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இந்நிலையில், தனது தந்தைக்காக மூன்று வரும் கடினமாக உழைத்து ஒரு வீடு ஒன்றை மும்பையில் கட்டியுள்ளார்.இவரது தந்தை நவாபுதீன் சித்திக் 7 வருடங்களுக்கு முன்பு இறந்தார். தந்தையின் மீது பாசம் கொண்டு நவாசுதீன் சித்திக் தந்தையின் பெயரில் மாளிகையை கட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புதானாவில் உள்ள தனது தந்தை வாழ்ந்த பாரம்பரிய வீட்டை போலவே இந்த பிரமாண்ட மாளிகையை கட்டி முடித்துள்ளார்.
நவாப் இல்லம்
அவரது நேரடி பார்வையிலும், ஆலோசனையின்படியும் இந்த மாளிகை உருவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த மாளிகை தற்போது திறக்கப்பட்டது. இதற்கு நவாப் பங்களா என்று பெயர் சூட்டியுள்ளார். பங்களாவின் படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்த நவாசுதீன், "ஒரு நடிக் எப்போதும் கெட்ட மனிதனாக இருக்க முடியாது. காரணம் அவனது உள்ளத்தில் உள்ள தூய்மைதான், நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழகான மாளிகையில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று பார்ப்போம். வீட்டிற்கு மூன்று கலர்தான் இருக்கு, நான்காவது கலர் ஒன்று இல்லை. வீட்டிற்குள் ஆறு பெட்ரூம், ஒரு கிச்சன், விருந்தாளிகளுடன் பேசுவதற்கு என்று தனி அறை இருக்கிறது. இவ்ளோ பெரிய பங்களாவை கட்ட அவர் மிகவும் கடினமாகவே உழைத்துள்ளார். "குறிப்பாக படத்தில் நடிக்கும்போது சில படங்களுக்கு பணம் பெறுவதில்லை. ஆனால், விளம்பரத்தில் நடிக்கும் போது அதிகமாகவே பணம் பெறுவேன்" என்று நவாசுதீன் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத் வருகை
அறிமுக இயக்குநர் டிக்கு வெட்ஸ் ஷெரு இயக்கும் புதிய படத்தில் கங்கனா ரணாவத்துடன், இணைந்து நவாசுதீன் சித்திக் நடித்து வருகிறார். வீட்டு மாளிகை பணி முடியும் தருவாயில் படக்குழுவினரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது, கங்கனா ரணாவத்துடன் புகைப்படம் எடுத்தது வைரல் ஆனது. மேலும், சுதிர் மிஸ்ராவின் சீரியஸ் மென் படத்தில் நடித்ததற்காக நவாசுதீன் சித்திக் சமீபத்தில் சர்வதேச எம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் வீட்டோடு ஒப்பிட்டு செய்தியாளர்கள் கேட்டபோத, "அவருக்கு அவரது வீடு பெரியது. எனக்கு நான் கட்டிய வீடு பெரியது அவ்ளோதான் யாரோடும் ஒப்பிட வேண்டாம்" என்று நவாசுதீன் கூறியுள்ளார்.