லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அனல் அரசு இந்த படத்துக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளனர்.
Also Read | போடு.! ஹாலிவுட் fans-க்கு ட்ரீட் தான்.. ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகும் “புல்லட் டிரெய்ன்”
ஊர்வசி ரவுத்தலா, ராய் லக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, ‘மறைந்த நடிகர்’ விவேக், யோகிபாபு மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் குறித்து இந்த படத்தின் பத்திரிகை சந்திப்பில் பேசிய லெஜண்ட் சரவணன், “இந்த படம் எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஒரு மாஸ் கமர்ஷியல் ஆக்ஷன் படம். இந்த படத்தை ஒருமுறைக்கு மேல் 2, 3 முறை பார்த்தால் தான் முழுமையாக இந்த பிரம்மாண்டத்தை அனுபவிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில், “இந்த முறை நான் அடிக்குற அடி மரண அடியா தான் இருக்கும். எதிரியால மறுபடியும் எந்திரிக்கவே முடியாது” என்று டீசரில் வரும் பஞ்ச் டயலாக்கை லெஜண்ட் சரவணன் பேசினார். தி லெஜண்ட் திரைப்படம் பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.
Also Read | “விஜய்-யின் 'மாஸ்டர்'ல நடிக்க வாய்ப்பு வந்தும் மிஸ் ஆயிடுச்சு...!” - வில்லனான இளம் நடிகர்.!