தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த 'தி லெஜண்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
Also Read | "AR Rahman எனும் பெயர் எனக்குச் சொந்தமானது மட்டுமில்ல" - கனடாவுக்கு நன்றி சொல்லி ரஹ்மான் ட்வீட்
இந்த 'தி லெஜண்ட்' படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடித்திருந்தார்.
கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றார். தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியானது.
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ’தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாயை திரையரங்க டிக்கெட் விற்பனை மூலம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஒரு எளிய மருந்தியல் விஞ்ஞானி தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.
தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டார், ரூபன் படத்தொகுப்பை கையாண்டார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதினார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார். வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
விவேக், விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், யோகி பாபு, மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
Also Read | போடு வெடிய..LEGEND சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. வெளியான சூப்பர் அப்டேட்!