ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை நடிகராக தன்னுடைய ஆளுமையைக் நிலை நிறுத்தி வந்தவர் நடிகர் விவேக்.
Also Read | பாடகி பிரகதி வாங்கிய புதிய விலையுயர்ந்த கார்.. விலை எவ்வளவு? இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?!
தமிழ் திரைப்படத் துறையில் 'சின்னக் கலைவாணர்' என அழைக்கப்படும் விவேக், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை புகுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்தவர். ஒரு திரைப்படத்தில் கருத்து கந்தசாமி என்கிற பெயருள்ள கேரக்டரிலேயே விவேக் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் வல்லவர், 'கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்'. அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் சொல்லி வந்தார்.
இப்படி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த விவேக், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அண்மையில் விவேக் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. தி லெஜண்ட் சரவணன் நடித்த இந்த படத்தை ஜேடி ஜெர்ரி இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.
திரையரங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்த படம் தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விவேக் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளில், ஒரு இடத்தில் விவேக்கிற்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் ஏடிஎம் கார்டு பின் நம்பரை கேட்கிறார்கள். விவேக் அதை சொல்கிறார். பின்னர் ஓடிபி நம்பரை கேட்கிறார்கள். விவேக் அதையும் சொல்கிறார். பின்னர் பணத்தை அக்கவுண்ட்டில் இருந்து எடுத்துவிட்டதாக மெசேஜ் வருகிறது. பேசியவர்களின் போன் கால் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பின்னர் இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என லெஜண்ட் சரவணன் பேசுகிறார்.
இப்படி நடிகர் விவேக் என்றாலே கருத்துள்ள காமெடி இருக்கும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தி லெஜண்ட் படத்திலும் அமைந்துள்ளதால் இதுகுறித்து ரசிகர்கள் நெகிழந்து பேசிவருகின்றனர்.
Also Read | Kushboo : தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குஷ்பு .. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!