www.garudavega.com

மிரட்டப் போகுது!! ஐஸ்வர்யா ராஜேஷின் "தி கிரேட் இந்தியன் கிச்சன்".. வெளியான அடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "The Great Indian Kitchen" படத்தின் second look போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

The Great Indian Kitchen tamil second look poster revealed.

மலையாள படம்

மலையாளத்தில் கடந்தாண்டு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த படமான  "The Great Indian Kitchen" சூப்பர் ஹிட்டாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று, பாராட்டுகளையும் குவித்தது. இப்படத்தை ஜியோ பேபி எழுதி இயக்கியுள்ளார். நிமிஷா சஜயன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டிஜோ அகஸ்டின், ஜோமோன் ஜேக்கப், விஷ்ணு ராஜன், சஜின் S ராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சுராஜ் S.குரூப் மற்றும் மேத்யூ புலிக்கண் இசையமைத்துள்ளனர்.

இன்னைக்கு தான் புஷ்பா படம் பார்த்தேன்.. நாட்டாமை கொடுத்த 'நச்' தீர்ப்பு!

சாதிக்கும் பெண்

The Great Indian Kitchen tamil second look poster revealed.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு அனுபவிக்கும் பல பிரச்சனைகள் மற்றும் குடும்பத்திலுள்ள ஆணாதிக்கத்தை பற்றியும் இப்படம் தெளிவாக கூறியது. புதிதாக திருமணமாகும் பெண் தனது கணவர் வீட்டில் பல கனவுகளோடு சென்றிருக்கும் நிலையில், கணவன் வீட்டில் சமையல் செய்வது, விரும்பத் தகாத விஷயங்கள் செய்வது, அழுக்குப் பாத்திரங்கள் கழுவுவது போன்ற அனைத்து வேலைகளிலும் ஈடுபடும் ஒரு பெண், அதே வேலையில் ஆண்கள் எவ்வித சிரமுமின்றி தங்கள் வேலைகளை மட்டும் செய்துவிட்டு பெண்களை ஒரு பொருளாக பயன்படுத்துவதை பற்றி கூறும் ஒரு படமாக இருந்தது.

பாகுபாடு

The Great Indian Kitchen tamil second look poster revealed.

ஒரு கணவன் தனது மனைவியை எப்படி வழி நடத்துகிறார் என்பதை படம் தெளிவாக காட்டியது. பல இன்னல்களை தாண்டி அந்தப் பெண் எப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதை இப்படத்தில் தெளிவாக காட்டப்பட்டது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின்   தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

எப்படி பார்த்தாலும் செம கூட்டணி!.. உதயநிதி - மாரி படத்திற்கு மியூசிக் யாருனு பாருங்க!

தனித்துவமான நடிப்பு

The Great Indian Kitchen tamil second look poster revealed.

தமிழ் சினிமாவில் முன்னணிக் கதாநாயகியான இவர், பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெறுவார். கதாநாயகிக்கான படங்களில் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்படும். இப்படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். இப்படத்தை R.கண்ணன் இயக்குகிறார். துர்காராம் சவுத்ரி மற்றும் நீல் சவுத்ரி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

The Great Indian Kitchen tamil second look poster revealed.

இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பார்வையும் வெளியிட்டுள்ளனர். மேலும், படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாக போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

The Great Indian Kitchen tamil second look poster revealed.

People looking for online information on Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ், சாதிக்கும் பெண், சுராஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன், Great Indian Kitchen, Trailer Coming soon will find this news story useful.