புது படத்தில் இணைந்த பிரியா மணி - சன்னி லியோன்... தெறிக்க தெறிக்க வெளியான FIRST LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Filminati Entertainment காயத்திரி சுரேஷ் வழங்கும்  & Whistleman Films Production மற்றும்  Sri Guru Jothi Films உடன் இணைந்து வழங்கும், இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

The first look of the movie ‘Quotation Gang’ revealed

நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள,  ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The first look of the movie ‘Quotation Gang’ revealed

இயக்குநர் விவேக் குமார் கண்ணன் கூறுகையில், “எங்கள் கனவுத் திரைப்படமான ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த வாரம் தான் திட்டமிட்டபடி  படப்பிடிப்பை முடித்தோம்,  இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெரும் சவாலாக இருந்தது.

காஷ்மீரில் உள்ள ரோரிங் லயன்ஸ் நிறுவனம் மற்றும் மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மற்ற யூனிட்கள் இந்த முக்கியமான தொற்றுநோய்க் கட்டத்திற்கு மத்தியில், இந்தத் திரைப்படத்தை முடிப்பதில் தூண்களாக இருந்ததற்காக படக்குழு மற்றும் தயாரிப்பு பிரிவுக்கு நன்றி. ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோருடன்  மற்ற காஷ்மீர் மற்றும் மும்பை நடிகர்களின் நடிப்பு படத்திற்கு மிகபெரும் பலத்தை தந்துள்ளது. தற்போது, போஸ்ட் புரடக்சன் வேலைகள் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் அவர் கூறுகையில்.., காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட பல மொழி க்ரைம்-த்ரில்லர், திரைப்படம் கொட்டேஷன் கேங் என்றார்.  இப்படம் நடிகர்களின் சிறப்பான நடிப்பையும், தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறந்த திறமையையும் கொண்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து, டிரெய்லர், ஆடியோ மற்றும் தியேட்டர் ரிலீஸ் தேதி குறித்த மற்ற அறிவிப்புகளை வெளியிட கோட்டேஷன் கேங் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

புகழ்பெற்ற முதன்மை நடிகர்களுடன், ரெட் ரெயின் புகழ் விஷ்னோ வாரியர், ஜீ புகழ் அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கரண்டே, சதீந்தர் & ஷெரின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ‘கொட்டேஷன் கேங்’ படத்தை  எழுதி, இயக்குவதோடு, விவேக் குமார் கண்ணன்  Filminati Entertainment நிறுவனத்தின் காயத்திரி சுரேஷ் ஆகியோருடன் Sri Guru Jothi Films சார்பில் G. விவேகானந்தன் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

The first look of the movie ‘Quotation Gang’ revealed

People looking for online information on ‘Quotation Gang’, Jackie Shroff, Priyamani Baby Sara, Sunny Leone will find this news story useful.